கோவிட் தடுப்பூசி போடாதவர்களால் தான் வைரஸ் உருமாற்றம் அடைகிறது; தமிழக அரசு வாதம்!!

புதுடில்லி: கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளாவர்களால்தான் வைரஸ் உருமாற்றம் அடைவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது.

கோவிட் தடுப்பூசி செலுத்துவதை பல மாநில அரசுகள் கட்டாயம் என அறிவித்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று (மார்ச் 22) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பிலான வாதுரையில், கோவிட் தடுப்பூசி போடாதவர்களால்தான் வைரஸ் உருமாற்றம் அடைவதாக குறிப்பிட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.