2வது நாளாக பன்னீர்செல்வம் கூறியது என்ன?

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன்பு முன்னாள் துணை முதல்வர் பன்னீர்செல்வம் இரண்டாவது முறையாக ஆஜரானார்.
அவர் ஆணையத்தின் முன்பு கூறியதாக வெளியான தகவல்:
* தஞ்சை, அரவகுறிச்சி , திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலலிதா தான்.
*இடைதேர்தல் தொடர்பான படிவங்களில் கைரேகை வைத்தது எனக்கு தெரியும்
* ஜெ.,வுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது
*ஜெ., சிகிச்சையின் போது அவர் நன்றாக உள்ளதாக ஒரு சில முறை சசிகலா கூறினார்.
*சசிகலா கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன். பொாது வெளியில் கூறவில்லை.
*அரசாங்க பணிகள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக எந்த தகவலையும் சசிகலா என்னிடம் தெரிவிக்கவில்லை.
இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.