பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் சாதனை: அமித்ஷா!!

ஜம்மு: காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தியதில் கிடைத்த மகத்தான வெற்றியே, நமது பாதுகாப்பு படையினரின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

சிஆர்பிஎப் அமைப்பின் எழுச்சி தின விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: இந்தியாவில் மக்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை வழங்கும் பணியை சிஆர்பிஎப் நீண்ட காலமாக செய்து வருகிறது. இக்கட்டான சூழலில் இருந்த மக்களை, வீரர்கள் நிம்மதிபெருமூச்சு விட செய்துள்ளனர். தேர்தல், ஜனநாயகத்தின் திருவிழாவாகவும், ஜனநாயக நாட்டின் ஆன்மாவாக நேர்மையான தேர்தல் உள்ளது. லோக்சபா அல்லது எந்த சட்டசபைக்கு தேர்தல் நடந்தாலும், அங்கு அமைதியான முறையில் தேர்தல் நடத்துவதை சிஆர்பிஎப் உறுதி செய்துள்ளது. 2014 ல் மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர், காஷ்மீரின் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. காஷ்மீரில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதில் கிடைத்த மகத்தான வெற்றியே நமது படைகளின் மிகப்பெரிய சாதனையாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.