இளையராஜாவின் ‛ராக் வித் ராஜா’வில் தனுஷ் ‛ராக்ஸ்’!!

சென்னை : சென்னையில் நடந்த இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் பங்கேற்று நிலா அது வானத்து மேமேல பாடலை தாலாட்டு பாடலாக பாடி அசத்தினார்.

இசையமைப்பாளர் இளையராஜாவின் இன்னிசை நிகழ்ச்சி ராக் வித் ராஜா என்ற பெயரில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் பல பின்னணி பாடகர்கள் பங்கேற்று இளையராஜாவின் இன்னிசையில் பாடியதோடு ரசிகர்களை இளையராஜாவின் இன்னிசை மழையில் நனையவிட்டனர். இந்த நிகழ்வில் நடிகர் தனுஷ் தனது மகன்கள் லிங்கா, யாத்ரா உடன் பங்கேற்றார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.