தென் கொரியாவில் ஒரே நாளில் 6 லட்சம் பேருக்கு தொற்று உறுதி: ஒமிக்ரான் பயங்கர தாக்குதல்!
சியோல்: தென் கொரியாவில் ஒமிக்ரான் வைரஸ் தாக்குதல் தீவிரமாகி வருகிறது. இங்கு தினசரி பாதிப்பு 2 லட்சம் வரை இருக்கும் என நிபுணர்கள் கணித்திருந்த நிலையில், நேற்று முன்தினம் ஒரேநாளில் மட்டுமே 6 லட்சத்து 21 ஆயிரத்து 328 பேருக்கு தொற்று உறுதியானது.
மேலும், 400க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி இந்நாட்டில் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. 20 பேரில் ஒருவருக்கு தொற்று தென்படுகிறது. இதனால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நாட்டில் 87 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அதையும் மீறி ஒமிக்ரானின் தாக்குதல் தீவிரமாகி இருப்பது, தென் கொரிய அரசை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.