சிறைக்கைதிகள் பட்டியல் பரிமாற்றம்!
இந்தியா, பாகிஸ்தான் இடையே சிறைக்கைதிகள் பட்டியல் பரிமாற்றம்!
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் 2008ஆம் ஆண்டு செய்துகொண்ட தூதரக ஒப்பந்தத்தின் விதிகளின் படி ஜனவரி 1 மற்றும் ஜீலை 1 ஆகிய தேதிகளில் இரு நாடுகளும் தங்கள் நாட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் பட்டியலை பரிமாறிகொள்ள வேண்டும்.
அந்த வகையில், இந்திய சிறைகளில் உள்ள 263 கைதிகள் மற்றும் சிறை பிடிக்கப்பட்ட 77 மீனவர்களின் பட்டியலை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அதேபோன்று பாகிஸ்தான் சிறைகளில் உள்ள 49 கைதிகள் மற்றும் சிறைபிடிக்கப்பட்ட 270 மீனவர்களின் பட்டியலை இஸ்லாமாபாத்தில் இந்திய தூதரகத்திடம் இன்று ஒப்படைத்தது.
இந்தச் சூழலில், மீனவர்கள் உள்பட 80 பாகிஸ்தான் கைதிகளின் தேசிய நிலையை உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தவும் இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளது.
N. அப்துல் சமது
தலைமை செய்தி ஆசிரியர்
தமிழ்மலர் மின்னிதழ்