இந்திய மகளிர் ஹாக்கி அணி..

டோக்கியோ
ஒலிம்பிக்கில் வரலாறு படைப்போம்!

புதுடெல்லி!

அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்காண்டுள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி, 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை 8 போட்டிகளில் அர்ஜென்டினா அணியுடன் மோதுகிறது. இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இந்த தொடர் குறித்துஇந்திய அணி கேப்டன் ராணி ராம்பால் கூறியதாவது:-

அர்ஜென்டினாவுக்கு எதிராக முழு ஆற்றலையும் வெளிப்படுத்தி ஆடும்பட்சத்தில் அது ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக ஆடுவதற்கான நம்பிக்கை அதிகரிக்கும். டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதே எங்கள் இலக்கு. நிச்சயமாக டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று வரலாறு படைப்போம். நாட்டுக்கு பெருமை சோப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு மீண்டும் சா்வதேசப் போட்டியில் மிகுந்த உற்சாகத்தோடு களமிறங்குகிறோம்.

ரஹ்மான்
செய்தியா தமிழ்மலர் மின்னிதழ்