வளர்ப்பு நாயை பிரியாதவர்..

வளர்ப்பு நாயை
எங்கு சென்றாலும் தோளில் சுமந்து
செல்லும் அமெரிக்கர்,

கலிபோர்னியா: வளர்ப்பு நாயை பிரியாதவர்…அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் தான் வளர்க்கும் நாயை எங்கு சென்றாலும் தோளில் சுமந்து கொண்டே செல்வது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ லாஸ்கி என்பவர் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பினார். ஆனாலும் தனது வளர்ப்பு நாயான பென்ஜியை பிரிய விரும்பாத ஆண்ட்ரூ எங்கு சென்றாலும் அதனை அழைத்துச் சென்றார்.

இப்படியாக நியூயார்க், சியாட்டில், அஸ்பென், லாஸ்வேகாஸ் என பல்வேறு நகரங்களுக்குச் சென்றுள்ளார். சில நேரங்களில் சுமார் 35 கிலோ எடை கொண்ட அந்த நாயை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ரோலர் ஸ்கேட்டிங் மூலம் செல்வது பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பூபதி
செய்தியாளர் தமிழ்மலர் மின்னிதழ்