இந்தியாவில் மேலும் 2,528 பேர் பாதிப்பு, 3,997 பேர் நலம்!
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,528 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,997 பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,528 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,30,04,005 ஆனது. கடந்த 24 மணி நேரத்தில், 3,997 பேர் நலமடைந்ததால், வைரஸ் தொற்றில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,24,58,543 ஆனது. தற்போது 29,181 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.