ஸ்ரீவி.,யில் இன்று ஆண்டாள் திருக்கல்யாணம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் கோயிலில் பங்குனி உத்திர நாளான இன்று இரவு 7:00 மணிக்கு நடக்கும் ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணத்தையொட்டி ஆண்டாளுக்கு சாற்ற திருமலை திருப்பதி பெருமாள் கோயிலில் இருந்து பட்டு கொண்டு வரப்பட்டது.
இத்திருக்கல்யாண விழாவை முன்னிட்டு நேற்று காலை 9:30 மணிக்கு திருமலை திருப்பதி கோயில் உதவி செயல் அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் பட்டு வஸ்திரம் கொண்டு வரப்பட்டது. இதனை ஆடிப்பூர பந்தலில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் முத்துராஜா, வேதபிரான் சுதர்சன், ஸ்தானிகம் ரமேஷ், மணியம் கோபி வரவேற்றனர்.
பின் யானை முன் செல்ல மேளதாளங்கள் முழங்க மாடவீதி சுற்றி வந்து ஆண்டாள் சன்னதியில் பட்டு சமர்ப்பிக்கப்பட்டது. இன்று காலை 7:00 மணிக்கு செப்புத்தேரோட்டமும், இரவு 7:00 மணிக்கு ஆண்டாள், ெரங்கமன்னார் திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது. திருக்கல்யாணம் முடிந்தவுடன் பட்டு ஆண்டாளுக்கு சாற்றப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.