பெரும்பாக்கத்தில் 116.27 கோடி ரூபாயில் 1,152, அடுக்குமாடி குடியிருப்புகள்!

சென்னை பெரும்பாக்கத்தில் 116.27 கோடி ரூபாயில் 1,152, அடுக்குமாடி குடியிருப்புகள்!

மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர்
திரு /எடப்பாடி கே.பழனிச்சாமி ஆகியோர் முன்னிலையில் (01-01-2021) அன்று பிரதம மந்திரி வீட்டு வசதி (நகர்ப்புறம்)திட்டத்தின் கீழ் உள்ள அளவிலான வீட்டுவசதி கட்டுமான தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சென்னையில் மாதிரி வீட்டு வசதி திட்டமாக, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் 116.27 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் 1,152, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்ட பணிகளுக்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்கள், இவ் விழாவில் மாண்புமிகு மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) திரு ஹர்தீப் சிங் புரி, துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், தலைமைச் செயலாளர் க.சண்முகம் இஆப, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் முனைவர் தா. கார்த்திகேயன், இஆப, ஆகியோர் கலந்து கொண்டனர்.

S.முஹம்மது ரவூப்
தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்.