ஆசிரியர் பற்றாக்குறை; மாணவர்கள் சாலை மறியல்!!
ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அருகே மேல்வீராணம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், 400 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இங்கு 34 ஆசிரியர்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் 13 ஆசிரியர்கள் மட்டுமே சுழற்சி முறையில் பாடம் நடத்தி வருகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறையை கண்டித்து மாணவ, மாணவியர் இன்று (மார்ச் 17) காலை 10:00 மணிக்கு வகுப்பறை புறக்கணித்து, பள்ளி முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். பாணாவரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் சாலை மறியலை கைவிட மறுத்து விட்டதால், பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இதனால் மதியம் 1:00 மணிக்கு கலைந்து சென்றனர். சாலை மறியலால் பாணாவரம்- காவேரிப்பாக்கம் சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை