இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்!!

இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தய சுற்று இன்று நடைபெற்றது.
இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரரும் உலகின் முன்னாள் நம்பர் 1 வீரருமான ரபேல் நடால் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய நடால்  7-6 (3), 7-6 (5) என்ற கணக்கில் ரெய்லியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் காலிறுதி போட்டியில் ரபேல் நடால் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்கியோஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.