உக்ரைனுக்கு எதிரான போரை நிறுத்துமாறு உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமெரிக்‍கா வரவேற்பு..!!

 உக்ரைனுக்கு எதிரான போரை உடனே நிறுத்துமாறு உத்தரவிட்ட சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது. உக்ரைன் மீது கடந்த மாதம் 24-ம் தேதி படையெடுத்த ரஷ்யா அங்கு மூன்று வாரங்களுக்கும் மேலாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் கிழக்கு பகுதியில் இருக்கும் சில பிராந்தியங்களில் அந்நாடு இனப்படுகொலையை நடத்தி வருவதாக கூறி, இந்த ராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்டுள்ளது. இந்த தொடர் தாக்குதலில் உக்ரைனில் இருக்கும் பல முக்கிய நகரங்கள் உருக்குலைந்து போயிருக்கின்றன.

பல நகரங்கள் ரஷ்யாவிடம் வீழ்ந்துள்ளன. ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் நாடியது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், உள்நோக்கத்துடன் ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த மனிதாபிமானமற்ற செயலால் உக்ரைனின் கோடிக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். உண்மையிலேயே ரஷ்யா செய்வதுதான் இனப்படுகொலை. எனவே உக்ரைனில் ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைகளை உடனே நிறுத்துமாறு சர்வதேச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்நிலையில் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள அமெரிக்கா உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று ரஷ்யா போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார். உக்ரைனுக்கு அமெரிக்கா என்றும் உறுதுணையாக இருக்கும் என்றும் நெட் பிரைஸ் தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.