உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரம்..!!!
மதுரை சித்திரை திருவிழா உலகப்புகழ் பெற்றதாகும். இதையொட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் வருகிற 5-ந் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது.இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் தீவிரமாக நடந்து வருகிறது. திருவிழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர், பஞ்சமூர்த்திகளுடன் காலை, இரவு இரு வேளைகளிலும் 4 மாசி வீதிகளில் வலம் வந்து காட்சி அளிப்பர். எனவே நகரில் விட்டவாசல், அம்மன் சன்னதி தெரு, நான்கு மாசி வீதிகளிலும் போடப்படும் பந்தல்களை சுவாமி வாகனங்கள் தட்டாதவாறு 30 அடி உயரத்திற்கு மேல் அமைத்து கொள்ள வேண்டும். மேலும் வேப்பிலைத் தோரணங்களையும், சுவாமி வாகனங்கள் தட்டாமல் அமைக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்.