இரண்டு மாதங்களில் அத்திக்கடவு திட்டம் ‘ரெடி’…
அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில், ஈரோடு மாவட்டம், காளிங்கராயன் அணைக்கட்டில் துவங்கி, பெருந்துறை, அவிநாசி, அன்னுார் வழியாக, காரமடை ஒன்றியம் வரை, ஈரோடு, திருப்பூர், கோவை என, மூன்று மாவட்டங்களில் 1,045 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. இத்திட்டத்தில், ஈரோடு மாவட்டத்தில், 5 இடங்களில் நீரேற்று நிலையங்களும், கோவை மாவட்டத்தில், அன்னுார் அருகே குன்னத்துாராம்பாளையத்தில், ஒரு நீரேற்று நிலையமும் அமைக்கும் பணி முடியும் தறுவாயில் உள்ளது. இப்பணியை நேற்றுமுன்தினம் திருச்செங்கோடு எம்.எல்.ஏ., ஈஸ்வரன், அத்திக்கடவு திட்ட செயற்பொறியாளர் அன்பழகன் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆய்வு செய்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.