பொள்ளாச்சி மாவட்டம்: பல ஆண்டு கனவு கைகூட வாய்ப்பு!!

ரசு நிர்வாக வசதிக்காகவும், அரசியல்ரீதியாக அ.தி.மு.க.,வை பலவீனப்படுத்தவும் பொள்ளாச்சி மாவட்டம் குறித்த அறிவிப்பு, தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரில் வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அ.தி.மு.க.,வுக்குள் நடந்த அரசியல் மோதலால் அது அறிவிக்கப்படவில்லை.அதனால், பொள்ளாச்சி மாவட்டம் பிரிப்பது கானல் நீரானது. கடந்த சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு வந்த தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ‘தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்கப்படும்’ என்று தெரிவித்தார். அதேபோல ஆட்சிக்கு வந்தபின், சட்டசபையில், பொள்ளாச்சி ஜெயராமன் இந்தக் கோரிக்கையை எழுப்பியபோது, ‘பத்தாண்டுகளாக உங்கள் ஆட்சியில் செய்ய முடியாததை நாங்கள் நிச்சயம் நிறைவேற்றுவோம்’ என்று மீண்டும் அதை உறுதிப்படுத்தினார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.