ஒரு டம்ளர் கருப்பு சாறில் இவ்வளவு பலன்களா???

கரும்பில் இரும்புச்சத்து, மக்னீசியம், கால்சியம் மற்றும் பிற சத்துக்கள் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. எனவே இந்த கரும்பு சாற்றை அடிக்கடி குடித்து வருவதன் மூலம் பல்வேறு சிறந்த ஆரோக்கியமான பயன்களை பெறலாம். ஒரு நாளைக்கு 2 முறை எலுமிச்சை மற்றும் தேங்காய் நீரை கரும்பு சாற்றில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரகக் குழாய் தொற்றுக்கள், சிறுநீரகக் கற்கள்ஆகிய பிரச்சனைகள் நீங்கும்.

கரும்பு சாறு தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்கி, உடலை தூய்மைப்படுத்தி, படிப்படியாக உடல் எடை குறைய உதவுகிறது.

வாய் துர்நாற்றம் அதிகம் இருக்கும் போது கரும்பு சாற்றை பருகி வந்தால் நல்ல தீர்வு கிடைக்கும். அதோடு பற்சிதைவை தடுத்து, பற்களின் வலுவை அதிகரிக்கும்.

செரிமானப் பிரச்சனை மற்றும் மன அழுத்தம் இல்லாத வாழ்வஹற்கு தினமும் கரும்பு சாறு உட்கொண்டு வர வேண்டும்.

தொண்டைக்குள் திடீர் அரிப்பு அல்லது எரிச்சலை சந்தித்தால் கரும்பு சாற்றில் ஒரு டம்ளர் குடித்தால் பயன் பெறலாம்.

கரும்பு சாறு வைரஸ்கள் அல்லது பாக்டீரியா நோய்த்தொற்றுகளை தடுத்து பல்வேறு நோய்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பை குறைப்பதுடன், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, மலச்சிக்கலை சரி செய்கிறது.

கரும்பு வேரை நாட்டு சர்க்கரை சேர்த்து கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம் சிறுநீரகத்தில் ஏற்படும் எரிச்சல் சரியாகும்.

கரும்புச் சாறை அருந்துவதன் மூலமாக மூளையின் செயல்பாட்டை அதிகரித்து சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி குணசேகரன்.