டிவிட்டருக்கு “சவாரி அடித்த” கும்பகோணம் மேயர் சரவணன்!!!
கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர், மேயரான முதல் ஆட்டோ டிரைவர் என்ற பெருமை படைத்த சரவணன் டிவிட்டரில் இணைந்துள்ளார். கும்பகோணம் மாநகராட்சியின் முதல் மேயர் என்ற சாதனையைப் படைத்துள்ள சரவணன் டிவிட்டருக்கு வந்து விட்டார். சாதாரண ஆட்டோ டிரைவரான சரவணன் இன்று மாநகரத் தந்தையாக புதிய பெருமையை மக்களுக்குத் தேடிக் கொடுத்துள்ளார். மேயராக மாறினாலும் கூட தனது ஆட்டோ தொழிலை அவர் விட்டு விடவில்லை. பதவியேற்பு விழாவுக்கே ஆட்டோ டிரைவர் சீருடையில்தான் தனது கட்சியினருடன் அவர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.