எதிரிக்கு 13 ஆண்டு சிறை; இனி புடினின் ஆட்சிக்கு எந்த தொல்லையும் இல்லை…!

மாஸ்கோ: ரஷ்ய வழக்கறிஞர் மற்றும் சமூக ஆர்வலர் அலெக்ஸி நவால்னிக்கு 13 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் ரஷ்ய அதிபர் புடினின் ஆட்சிக்கு எந்தவித தடையும் இல்லாத வசதியான சூழல் உருவாகி உள்ளது.

ரஷ்ய அதிபர் புடின் ஐ எதிர்ப்பவர் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் வழக்கறிஞர் அலெக்ஸி நவால்னி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தலைநகர் மாஸ்கோவில் புடின் அரசின் ஊழலுக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தி வந்தார். புடின் தன்னைக் கொல்வதற்காக ஆபத்தான நரம்பு ஊசி ஒன்றை செலுத்தியதாக அலெக்ஸி ஏற்கனவே குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த ஆண்டு புடின் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய அலெக்ஸி மற்றும் அவரது மனைவி ஆகியோரை ரஷ்ய போலீசார் கைது செய்தனர்.

அலெக்ஸியின் ஆதரவாளர்கள் பலரும் கைதாகினர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் அலெக்ஸி மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அவருக்கு இரண்டரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அலெக்ஸி சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். தற்போதைய விளாடிமிர் புடின் அரசு, அலெக்ஸி மீது வேறு பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 13 ஆண்டுகள் சிறை விதித்து உத்தரவிட்டார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.