பழைய வாகன பாகங்களில் இருந்து இரும்பு சிற்பங்கள்!!!
: மதுரை மாநகராட்சி பழைய வாகன உதிரி பாகங்களில் இருந்து இரும்பு சிற்பங்கள் செய்து சுற்றுச்சூழல் பூங்காவில் 2017 ல் வைக்கப்பட்டன. அதேபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மீண்டும் சிலைகள் செய்து மாநகராட்சி பூங்கா, ரவுண்டானாக்களில் வைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் எழுந்துள்ளது. செல்லுாரில் மாநகராட்சி வாகன பராமரிப்பு மையம் உள்ளது. இங்கு வாகனங்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட்ட பழைய இரும்பு உதிரி பாகங்களை ஏலம் விடுவர். அந்த பாகங்களை மீண்டும் சிற்பங்களாக செய்து மாநகராட்சி பூங்காக்கள், ரவுண்டானாக்களில் வைக்கலாம். குறைந்த செலவில் நகரை அழகாக்கியது போலவும், ஸ்மார்ட் சிட்டி என சொல்வதற்கு பொருத்தமாகவும் இருக்கும்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.