சர்க்கரை தராமல் சக்கை ஆகும் கரும்பு!!!
ஆர்.கே.பேட்டை: கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்புவதற்காக வெட்டப்பட்ட கரும்பு, ஆலைக்கு கொண்டு செல்வதில் தாமதம் ஆவதால், வெயிலில் காய்ந்து சக்கையாக மாறி வருவதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில், கரும்பு அதிகளவில் பயிரிடப்படுகிறது. கரும்புகளை, ஆலை நிர்வாகம் கொண்டு செல்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது.கடந்த 10 நாட்களாக வெயிலில் காயும் கரும்பு, ஈரப்பத தன்மையை இழந்து, சக்கையாக மாறி வருகிறது. பாடுபட்டு விளைவித்த கரும்பு, சாறு பிழியப்படாமல் வெயிலில் காய்ந்து மதிப்பிழந்து வருவதால், விவசாயிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஜஸ்டின்.