கர்ணன் திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்ட தனுஷ்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் திரைப்படம் கர்ணன். ஆக்ஷன் திரைப்படமான இந்தப் படத்தில் சண்டைக்கோழி புகழ் லால், அறிமுக நாயகி ரஜீஷா விஜயன், யோகி பாபு ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். வி கிரியேஷன்ஸ் பேனரின் கீழ் கலைப்புலி எஸ். தானு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
இன்று ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கர்ணன் திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் தேனி ஈஸ்வர், ஆர்.கே.செல்வா, தா.ராமலிங்கம், யுகபாரதி, திலிப் சுப்பராயன், சாண்டி, சுரேன் ஜி, கபிலன், அமிர், வெங்கட் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து பணியாற்றியுள்ளனர். மேலும் விரைவில் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்
S. சுரேஷ் தலைமை செய்தி ஆசிரியர் தமிழ் மலர் மின்னிதழ்,