கடற்படை தளவாட உதிரிபாக உற்பத்தி மையமாகிறது கோவை!

கடற்படைக்கு தேவையான தளவாட உதிரி பாக உற்பத்தி மையத்தை, கோவையில் ஏற்படுத்த, நகரில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், டில்லி கடற்படை தலைமையக அதிகாரி ரியர் அட்மிரல் விருப்பம் தெரிவித்துள்ளார். விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. கொடிசியா தலைவர் ரமேஷ்பாபு, “ராணுவத்திற்கு தேவையான தரமான பொருட்களை தயாரிப்பதில், கொடிசியா ஈடுபட்டுள்ளது. ராணுவ ஆர்டர்களை பெறவும், அதை தொழில் துறையினர் பயன்படுத்திக் கொள்ளவும், வழிகளை ஏற்படுத்த முயன்று வருகிறோம். கடற்படையினர் தங்கள் தேவைகளை தெரிவித்தால், அதற்கான தயாரிப்புகளை மேற்கொள்ள இங்குள்ள தொழிற்சாலைகள் தயாராக உள்ளன.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்.