ராமேஸ்வரம் கோவிலில் ரூ.1 கோடி நகை மறைப்பு?

 ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில், நன்கொடையாக வழங்கிய 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மறைக்கப்பட்டதாக எழுந்த சர்ச்சையால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலுக்கு, மார்ச் 1ல், புதுச்சேரி தனியார் நிறுவனம் சார்பில், 1 கோடி ரூபாய் மதிப்புள்ள, தங்கமணிகள் பதித்த பெரிய ருத்ராட்ச மாலை, அம்மனுக்கு வைர கற்கள் பதிக்கப்பட்ட நெக்லஸ் வழங்கப்பட்டன. கோவில் நிர்வாகம் இந்த நகைகள் குறித்து முறையான அறிவிப்பு வெளியிடவில்லை. நகைகளை இதுவரை பதிவு செய்து, மதிப்பீடு செய்யாமல் பணியாளர்களே வைத்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.