சிக்கராயபுரம் கல்குவாரி நீர்த்தேக்க திட்டம் இழுத்தடிப்பு!!!
குன்றத்துாரை அடுத்த சிக்கராயபுரத்தில், 23 கல்குட்டைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும், 400 — 500 அடி ஆழம் உடையவை. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் இல்லாத நேரத்தில், இந்த கல்குட்டைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரை சுத்திகரிப்பு செய்து, சென்னைக்கு வழங்குவர். ஒவ்வொரு ஆண்டும், இது தொடர்கிறது.அதேநேரத்தில், மழை காலத்தில் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் போது, அங்கிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர், அடையாறு ஆறு வழியாக கடலுக்கு செல்கிறது.தாம்பரத்தை அடுத்த எருமையூர் கிராமத்தில், 20க்கும் மேற்பட்ட கல்குவாரி குட்டைகள் உள்ளன. அவற்றில், ஆண்டு கணக்கில் தண்ணீர் தேங்கியுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், மெட்ரோ வாட்டர் நிர்வாகம், இந்த குட்டைகளில் இருந்து, சென்னைக்கு தேவையான குடிநீரை சுத்திகரிப்பு செய்து எடுத்தது.சிக்கராயபுரம் கல்குவாரி போன்று, எருமையூர் கல்குவாரிகளுக்கும், செம்பரம்பாக்கம் உபரிநீரை எடுத்து செல்லலாம். பழந்தண்டலம் கால்வாய் வழியாக, இத்திட்டத்தை செயல்படுத்தலாம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்