காஞ்சி காமாட்சி அம்மனுக்கு ரூ.5 கோடியில் தங்க கவசம்..!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மனுக்கு ஐதராபாத்தை சேர்ந்த பக்தர் ஒருவர் ரூ.5 கோடி மதிப்பில் கீரீடம் முதல் பாதம் வரை வைரம் வைடூரியம் மரகத கற்கள் பதித்த தங்க கவசத்தை காணிக்கையாக வழங்கினார். இந்த தங்க கவசம் சிம்மாசனத்தில் வைக்கப்பட்டு மங்கள மேள வாத்தியங்களுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.  இதனைத் தொடர்ந்து சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் காமாட்சி அம்மனுக்கு தங்க கவசத்தை அணிவித்து சிறப்பு தீபாராதனைகள் செய்தார். இந்த ஊர்வலத்திலும், தங்க கவசம் அணிவிக்கும் நிகழ்ச்சியிலும் ஐதராபாத்தைச் சேர்ந்த உபயதாரர், அயோத்தி ராமஜென்ம பூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த கிரி உள்பட பலரும் கலந்து கொண்டனர். 

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி