எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் மீண்டும் சோதனை!!

எஸ்.பி. வேலுமணி வீடு உள்பட 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி. வேலுமணி. தற்போது கோவை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ.வாகவும் அதிமுக சட்டப் பேரவை கொறடாவாகவும் உள்ளார். இந்த நிலையில், இவருக்குச் சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா.