காலையில் கல்விக்கூடம்; மாலையில் மதுக்கூடம்! அரசு பள்ளியில் அவலம்…
‘பள்ளிக்கு பாடம் கற்க ஆசையாய் ஓடி வரும் மாணவர்கள், தினமும் காலையில் பார்ப்பது மதுபாட்டில்கள், சிகரெட் பாக்கெட்டுகள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுச்சுவர் அமைக்க கோரிக்கை விடுத்தும் ஒருவரும் கண்டு கொள்ளவில்லை’ என, வேதனையில் குமுறுகின்றனர் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். இப்பள்ளி, குறிச்சி குளக்கரை அருகில், 3.7 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. ஆறு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் படிக்கின்றனர். நான்கு ஆண்டுகளுக்கு முன் வரை, 80 என்ற மாணவர் எண்ணிக்கையில் மூடுவிழாவை எதிர்நோக்கி இருந்தது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சுகந்தி ஜெர்மனி.