விவசாயிகள் பொது சேவை மையம் மூடல்:நேரடியாக உரம் வழங்க கோரிக்கை!!!
மேட்டுப்பாளையம்:உரக் கம்பெனிகள், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, நேரடியாக உர மூட்டைகளை வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், ஆயிரம் விவசாயிகளை உறுப்பினர்களாக சேர்த்து ஒருங்கிணைத்து, அரங்கநாதர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தை துவக்கியுள்ளனர். நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள விவசாயிகளுக்கு, மிக குறைந்த விலையில் உரங்கள் கிடைக்க சேவை மையம் துவக்கப்பட்டது. அனைத்து உரக் கம்பெனிகளுக்கும் மற்றும் வேளாண் இயந்திரங்கள் உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கும், உரம் மற்றும் மூலப்பொருட்கள் நேரடியாக வழங்கும்படி, நிறுவனத்தின் சார்பில் கடிதம் அனுப்பியுள்ளோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி கண்ணன் தேனி.