பதவி உயர்வுக்கு ரூ.35 லட்சம் லஞ்சம் வசூல் -விசாரணை…

சென்னை எழிலகத்தில் உள்ள அரசு போக்குவரத்து துறை துணை கமிஷனர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பதவி உயர்வுக்காக வசூலிக்கப்பட்டு, கட்டு கட்டாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 35 லட்சம் ரூபாயை
பறிமுதல் செய்தனர்.சென்னை, சேப்பாக்கத்தில் எழிலகம் என்ற அரசு கட்டடத்தின் முதல் தளத்தில் போக்குவரத்து துறை அலுவலகம் உள்ளது. இங்கு, நிர்வாக பிரிவு துணை கமிஷனராக நடராஜன், 55, பணிபுரிகிறார். மேலிடத்திற்கு வசூல் நடத்தி கொடுக்கும் வேலையை தான் நடராஜன் பிரதானமாக செய்து வந்தார் என, போக்குவரத்து துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சோதனை இரவு 10:00 மணிக்கு மேலும் தொடர்ந்தது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை