கார் பார்க்கிங் பகுதிகளை ராணுவ பயிற்சி மையமாக மாற்றிய உக்ரைன்!
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து 19-வது நாளாக நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.
கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன.
இந்த நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் கார் பார்க்கிங் பகுதிகளை ராணுவ பயிற்சி மையமாக மாற்றி உக்ரைன் ராணுவம் பயிற்சியளித்து வருகிறது.
ரஷிய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிக்குள் எவ்வாறு நுழைவது அதன்பின் எப்படி எதிர்தாக்குதல் செய்வது போன்ற யுத்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.
நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் எல்லை பாதுகாப்பு பிரிவு வீரர்களுக்கு இந்த பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. அதன்பின் அவர்கள் சிறி குழுக்களாக பிரித்து அனுப்பப்படுவார்கள் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.