ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடி உருவ மாஸ்க் விற்பனை அமோகம்..!
உத்தர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள சந்தைகளில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு பிரதமர் மோடியின் உருவ மாஸ்க் விற்பனை களைகட்டியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த உத்தர பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் பொது தேர்தலில் பாஜக கட்சி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றி பிரதமர் மோடியின் உருவ மாஸ்க்கிற்கான தேவை மற்றும் விற்பனையை அதிகரித்துள்ளது.
ஹோலி பண்டிகை வசந்த காலத்தின் தொடக்கத்தை குறிக்கும் வகையில் அனைவரும் கொண்டாடும் ஒரு மகிழ்ச்சியான நிகழ்வாகும். இந்த பண்டிகையின் போது மக்கள் ஒருவர் மேல் ஒருவர் வண்ண சாயங்களை பூசி கொண்டாடுவர். இதையொட்டி பிரயாக்ராஜ் பகுதியில் உள்ள சந்தைகளில் வண்ணசாய பொடிகள், நீர்த்துப்பாக்கிகள் ஆகியவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா தொற்றின் காரணமாக மக்கள் யாரும் ஹோலி பண்டிகை கொண்டாட பெரிதளவு உற்சாகம் காட்டவில்லை. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள பொது தேர்தலின் முடிவுகளுக்கு பிறகு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர். இதனால் கடந்த 2 ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு மோடி உருவ மாஸ்க்கின் தேவையும் விற்பனையும் அதிகரித்துள்ளது என்று ஒரு கடைக்காரர் கூறியுள்ளார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.