பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்- இரண்டாவது அமர்வு இன்று தொடங்குகிறது!
ட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது கட்ட அமர்வு இன்று தொடங்குகிறது. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத் தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக முதல் கட்ட கூட்டத் தொடரில், காலையில் மாநிலங்களவையும், மாலையில் மக்களவையும் செயல்பட்டன.
தற்போது, கொரோனா பரவல் குறைந்துள்ளதால், இரு சபைகளும் வழக்கம் போல் காலை 11 மணிக்கு தொடங்குகின்றன.
முதல் நாளான இன்று காலை ஜம்மு – காஷ்மீருக்கான பட்ஜெட்டை, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவீந்திரன் ஜெர்மனி.