சிவகங்கை நகருக்கு செம பிளான்: குறைகளை தீர்க்கும் சேர்மன்!!!

சிவகங்கை நகரில் நகர்மன்றத் தலைவரும் திமுகநகர செயலாளருமான துரை ஆனந்த் 27வது வார்டில் பொதுமக்கள் தங்களின் பகுதியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறும் வகையில் புகார் மனு பெட்டியை திறந்து வைத்தார். இந்த புகார் மனு பெட்டியை நகராட்சி ஆணையாளர் பொறுப்பு ராஜேஸ்வரன் முன்னிலையில், நகராட்சி தலைவர் துரை ஆனந்த் கலந்துகொண்டு திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அந்த புகார் மனு பெட்டியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பகுதியில் உள்ள குறைகளை எழுதி புகார் மனுவாக புகார் மனு பெட்டியில் இட்டனர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.