முல்லை பெரியாறு பிரச்னை விஸ்வரூபம்!!!
முல்லை பெரியாறு அணை பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சட்டப் போராட்டத்தை மீண்டும் கையில் எடுக்க வேண்டிய நெருக்கடி, தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை தொடர்பாக நடந்து வரும், அடுத்தடுத்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.பாதுகாப்புஇதனிடையே, அணையின் நிர்வாக அதிகாரத்தை, தமிழக அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். தமிழக பொறியாளர்கள் அணைப் பகுதியில் தங்கி பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.அணைக்கு மத்திய தொழிலக பாதுகாப்பு படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை பழங்காநத்தத்தில், விவசாயிகள் நாளை உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை.