சூரை மீன்பிடித் துறைமுக பணிகளால் மீனவர்கள் உற்சாகம்!!!
சென்னை திருவொற்றியூரில், 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும், சூரை மீன்பிடித் துறைமுக கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அனைத்து பணிகளும் முடிந்து, இந்தாண்டு இறுதியில், துறைமுகம் பயன்பாட்டிற்கு வரும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். படகு அணையும் தளங்கள் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கூடுதல் பணிக்கு, திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை