பத்திர பதிவில் அரசுக்கு துரோகம்…

தமிழக பதிவுத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு நடப்பாண்டில் 12,700 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் வந்துள்ளது. இதை தெரிவித்துள்ள அமைச்சர் மூர்த்தி, ‘பத்திரப்பதிவு மேற்கொள்ளும்போது, சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலர்களுக்கோ, இடைத்தரகர்களுக்கோ லஞ்சம் கொடுக்க வேண்டாம்; லஞ்சம் கேட்கும் அலுவலர்கள் மீது பதிவுத்துறை தலைவர், அரசு செயலாளர், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கலாம்’ என்றும் தெரிவித்துள்ளார். பத்திரப்பதிவு அலுவலகங்களில் லஞ்சம் எவ்வாறு வசூலிக்கப்படுகிறது என்பதை அனைவரும் அறிவர். பத்திர எழுத்தர்களுக்கும், சார் பதிவாளர்களுக்கும் இருக்கும் எழுதப்படாத ஒப்பந்தப்படி, லஞ்சம் நிர்ணயம் செய்யப்படுகிறது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ராஜா