காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்..

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் கூட்டம் நடக்க உள்ளது.நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்துள்ளது. பஞ்சாப்பில் ஆட்சியில் இழந்துள்ளது. உத்தர பிரதேசத்தில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்துள்ளது.உத்தரகாண்டில் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி நிலவிய போதும் அதை பயன்படுத்த முடியாமல் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதேபோல் கோவாவில் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை இழந்து உள்ளது. மணிப்பூரிலும் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் தேர்தல் தோல்வியை தொடர்ந்து காங்கிரசில் அதிருப்தியில் இருக்கும் ஜி 23 தலைவர்கள் எனப்படும் மூத்த தலைவர்கள் இணைந்து கடந்த வெள்ளிக்கிழமை அவசர கூட்டம் நடத்தினர். காங்கிரசின் தோல்வி குறித்த விவாதம் நடத்துவதற்காக இவர்கள் கூடினார்கள் இந்த குழுவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கபில் சிபல், அனந்த் சர்மா, மனிஷ் திவாரி , குலாம்நபி ஆசாத் ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குழுவில் இருந்த ஜிதின் பிரசாத், யோகானந்த சாஸ்திரி ஆகியோர் ஏற்கனவே காங்கிரசை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் 21 பேர் மட்டுமே கூட்டத்தில் கலந்து கொண்டனர்.