ரஷ்யா உக்ரைனில் வான்வழி தாக்குதல்…
மேற்கு உக்ரைனில் உள்ள விமான நிலையங்கள் மீது, ரஷ்ய படையினர் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பக்லனோவா முராவிகா மீண்டும் உக்ரைன் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.ரஷ்ய ராணுவத்தினர், கடந்த 24ம் தேதி முதல், கிழக்கு ஐரோப்பிய எல்லைப் பகுதியில் உள்ள நாடான உக்ரைனில் நுழைந்து, தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.ஏவுகணைகள் மற்றும் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வான்வழி தாக்குதல் நடத்தி, நாட்டின் முக்கியமான சில நகரங்களை கைப்பற்றி வருகின்றனர் ரஷ்ய ராணுவத்தினர். உலகின் டேஞ்சரஸ் ஸ்னைப்பர்.. உக்ரைன் படையுடன் இணைந்தஅகதிகளாகும் மக்கள்ரஷ்யாவின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, ஆயிரக்கணகான உக்ரைன் மக்கள், அண்டை நாடுகளுக்கு அகதிகளாக வெளியேறி வருகின்றனர். இந்நிலையில், மேற்கு உக்ரைனில் அமைந்துள்ள லுட்ஸ்க் மற்றும் இவானோ பிரான்கிவ்ஸ்க் நகரங்களில் உள்ள விமான நிலையங்களை குறிவைத்து ஏவுகணைகள் வீசப்பட்டுள்ளன.