சீனாவில் புது வைரஸ் முழு ஊரடங்கு அறிவிப்பு!

சீனாவின் சாங்சன் பகுதியில் புதிய வைரஸ் பரவல் காரணமாக முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.சீனாவின் உகான் நகரில் 2019- ல் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 221-க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவி தற்போது வரை பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. உயிர்பலி எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது.

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக இருந்தாலும் அதன் வைரஸ் உருமாற்றம் தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 38.74 கோடியாக அதிகரித்துள்ளது.இந்தநிலையில் சீனாவில் அடுத்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.