கோவையில் இருந்து விமானம் மூலம் மும்பைக்கு பறக்கும் மதுரை மல்லி!!!
மும்பையில் வசிக்கும் தமிழர்கள் மதுரை மல்லி மீது கொண்டுள்ள ஆசையே தினமும் கோவை வழியாக மல்லிகைப்பூ விமானத்தில் கொண்டு செல்வதற்கு காரணமாக உள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உள் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், உலக நாடுகளுக்கும் பல்வேறு விதமான கார்கோ பொருட்கள் விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. இதேபோன்று மதுரை புகழ் குண்டுமல்லியும் 1 டன் கோவை வழியாக மும்பைக்கு தினமும் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ஆறுமுகம் துபாய்