சென்னையில் கிலோ கணக்கில் ரத்தினக்கற்கள் பறிமுதல்!!!!

சென்னை விமான நிலையில் சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட 4.43 கோடி ரூபாய் மதிப்பிலான வைரம் மற்றும் ரத்தினக்கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து சென்னையை சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு மார்ச் 5-ஆம் தேதி பார்சல் ஒன்று வந்துள்ளது. அந்த பார்சலை சுங்கத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு உட்படுத்தினர். அப்போது, அந்த பார்சலில் வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு 5.85 லட்ச ரூபாய் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், எடை அதிகமாக இருப்பது போல் இருந்ததால், அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.