680 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் கோவிட் உயிரிழப்பு இல்லை…
தமிழகத்தில், கடந்த 680 நாட்களுக்கு பிறகு கோவிட் உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் கடந்த 2020 ஏப்ரல் 30ல் கோவிட் ஏதும் பதிவாகவில்லை. பொது சுகாதார இயக்குநர் செல்வரத்தினம் கூறுகையில்; தமிழகத்தில் 90 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப்பூசியும், 70 சதவீதம் பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியும் போட்டுள்ளனர். மூன்றாவது அலையின் போது கோவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்கள் மற்றும் மரணமடைபவர்களின் எண்ணிக்கை குறைவாக தான் இருந்தது எனக்கூறினார்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி