இ – சேவை’ மையங்களில் 200 சேவைகளை பெற வசதி..
சென்னை:பொதுமக்களின் வசதிக்காக, அரசு, ‘இ – சேவை’யில், இந்த மாத இறுதிக்குள் 200க்கும் மேற்பட்ட சேவைகளை வழங்கும் இலக்குடன், தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். இதுகுறித்து, தமிழக மின்னாளுமை முகமை இயக்கக அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம், தமிழ்நாடு அரசு கேபிள், ‘டிவி’ நிறுவனம் வாயிலாக, அரசு இ – சேவை மையங்களை இயக்கி வருகிறது. தனியார் இ -சேவை மையங்களும் செயல்பாட்டில் உள்ளன.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்