தி.மு.க., – அ.தி.மு.க., இடையே பதற்றம்: சுவரொட்டி பிரச்னையால் மோதல்…
திருமழிசை: திருமழிசை பேரூராட்சியில் எட்டு பெருசா, ஏழு பெருசா என்ற சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிக ஓட்டுகள் வாங்கிய எங்களை தோற்றதாக தெரிவித்ததாக, அ.தி.மு.க.,வினர் அதில் குறிப்பிட்டுள்ளனர். தி.மு.க., நபரை தலைவராக தேர்ந்தெடுத்ததில் முறைகேடு நடந்துள்ளதாக, ஏற்கனவே புகார் அளித்துள்ளோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை.எட்டு பேர், அ.தி.மு.க.,வின் தலைவர் வேட்பாளருக்கு ஓட்டளித்த நிலையில், இரு ஓட்டு செல்லாதது என அறிவித்தது தவறு. இதற்கு தேர்தல் ஆணையம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக தான், சுவரொட்டி ஒட்டிஉள்ளோம்.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை