உக்ரைனில் நடத்தப்பட்ட தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட 549 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. தகவல்!!

உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 549 பேர் கொல்லப்பட்டதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா அதன் மீது கடந்த 24ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு, மற்றொரு புறம் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், செர்னிகிவ், கெர்சன், மரியுபோலில் தாக்குதலைத் தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகிறது. போர் தொடர்வதால் உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் உக்ரைன் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்த போரில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.  போரினால் 20 லட்சம் பேர் அதிகளாக உக்ரைனை விட்டு வெளியேறி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிப்ரவரி 24 முதல் மார்ச் 9 வரை உக்ரைனில் நடந்த தாக்குதலில் 41 குழந்தைகள் உட்பட குறைந்தது 549 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.மேலும் 52 குழந்தைகள் உட்பட குறைந்தது 957 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாகவும் ஐநா மனித உரிமைகள் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உயிரிழப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.