இரவில் ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு!!!
சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை நேற்று இரவு அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு போக்குவரத்துக்கு பெரிதும் பயன்படுத்தப்படும் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே பாலாற்றின் மீது கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலங்களில் நடைபெற்று வரும் பாலத்தின் விரிவடையும் தன்மை கொண்ட இணைப்பு மாற்றும் பணி தொடர்பான ஆய்வு செய்யப்பட்டது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்