டி.ஜி.பி.,க்களுக்கு முக்கிய பதவி – ராமதாஸ் …

சென்னை:டி.ஜி.பி., அந்தஸ்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளை, முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் நியமிக்க வேண்டும்’ என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த பிரிவுகளின் தலைமை பதவிகளை, டி.ஜி.பி., நிலைக்கு நிரந்தரமாக உயர்த்த வேண்டும். ஐ.ஏ.எஸ்., – ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் நல்ல முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறிஉள்ளார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாண்டி மதுரை