ரயில் பயணியருக்கு மீண்டும் கம்பளி …
ரயில்களில் குளிர்சாதன பெட்டியில் பயணிப்போருக்கு போர்வை, கம்பளி மற்றும் தலையணை வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2020ல் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் ரயில் சேவைகள் துவங்கிய பின், போர்வை, கம்பளி, தலையணை வழங்கப்படவில்லை. ஜன்னல்களில் திரைச்சீலைகள் கூட பொருத்தப்படவில்லை. உணவு வழங்கும் சேவையும் நிறுத்தப்பட்டு இருந்தது. சமீபத்தில், ரயில்களில் உணவு வழங்கும் சேவை மீண்டும் துவங்கப்பட்டது. இந்நிலையில், போர்வை, கம்பளி, தலையணையை மீண்டும் வழங்க ரயில்வே துறை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்